வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

கேரளத்தில் கொரோனா பாதுகாப்பு விதிகள் ஒரு வருடத்திற்கு கட்டாயம்

மதுரை, ஜூலை 6- கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான பாதுகாப்பு விதிகளை அடுத்த ஒரு வருடத்திற்கு பின்பற்ற வேண்டும் என்று கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை தெரி வித்துள்ளது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணியிடங்களி லும் முகக்கவசங்கள் அணிய வேண்டி யிருக்கும்,  ஆறு அடி தனிமனித இடைவெளி எல்லா இடங்களுக்கும் பொருந்தும். திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதி யின்றி எந்த விதமான  கூட்டங்கள், ஒன்று கூடுதல், ஊர்வலங்கள், தர்ணாக்கள்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாது. இது போன்ற கூட்டங்களில் பங்கேற்பவர்கள் பத்து பேருக்கு மேல் இருக்கக்கூடாது. பொது இடங்கள், சாலைகள், எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்படும். மாநி லங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பாஸ் தேவையில்லை, ஆனால் பயணிகள் ஜக்ரதா இ-பிளாட்பாரத்தில் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி மாத இறுதியில் இந்தியாவின் முதல் கொரோனா தொற்றிருப்பதை அறி வித்த கேரளத்தில் இன்றுவரை 5,204 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மிகவும் வெற்றிகரமான மாநிலங்களில் கேரளமும் ஒன்று என சுகா தார நிபுணர்கள் பாராட்டி வருகின்றனர்.

;