தமிழகம்

img

மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு

சென்னை, ஜூலை 21- மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலைத்திட்டத்தை நீண்ட காலத் திற்கு செயல்படுத்தப்போவதில்லை என மக்களவையில் பேசியுள்ள மத்திய அமைச்சரின் பேச்சுக்கு அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் தமிழ் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.லாசர்  தலைமையில் ஈரோட்டில் நடை பெற்றது. மக்களவையின் நடப்பு  நிதியாண்டிற்கான வேளாண்மைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை  மானியக்கோரிக்கை அதன் மீதான  விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய  அத்துறையின் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஏழைகளுக்கான இந்தத்  திட்டம் நீண்டகாலத்திற்கு செயல் படுத்த முடியாது என்றும் அதே நேரத்தில் கூடுதலான நிதியை நடப்பு ஆண்டில் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்க் கையை நடத்துவதற்கு ஓரளவு உதவி யாக இருக்கும் இந்தத் திட்டத்தை கடந்த 5 ஆண்டுகாலமாக மோடி  அரசு சிதைத்து சின்ன பின்னாப் படுத்தியுள்ள சூழலில், அமைச்சர் தோமரின் இந்தப் பேச்சை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன் மையாகக் கண்டிக்கிறது.  நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட  மாநிலங்களில் தொடர்ந்து சில  ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சி யால் கிராமப்புற ஏழைகள் வேலை வாய்ப்புகளை இழந்து, வேலை யில்லாத் திண்டாட்டத்தில் உள்ள னர். மத்திய அரசின் விவசாயக் கொள்கை, தேசத்தின் முகத்தோற் றத்தையே மாற்றி உள்ளது. தனியார்  மயம், தாராளமயம், சிறு-குறு விவ சாயிகளின் வாழ்க்கையை சிதைத்து விட்டது. 

நிலங்கள் ஏழை விவசாயிகளிட மிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போய் குவிகிறது.  நவீன விவசாய முறை கிராமப்புற  விவசாயக் கூலித் தொழிலாளர்க ளின் வேலையைப் பறித்து வாழ்க்கை யையும் பறித்து வருகிறது. அதனால்  22 கோடி விவசாயத் தொழிலாளி களின் வாழ்க்கை எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.  இவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே பிடிமானம் மகாத்மா காந்தி நூறுநாள் வேலைத்திட்டம்தான். இதை சீர்படுத்தி நிதியை கூடுத லாக ஒதுக்கீடு செய்து ஏழை கூலித்  தொழிலாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் காரியத்தை செய்யாமல்  இந்தத் திட்டத்தையே நாங்கள்  காலப்போக்கில் கைவிடப்போகி றோம் என்று பொறுப்பற்ற முறை யில் சம்பந்தப்பட்ட மந்திரி நாடாளு மன்றத்தில் பேசியிருக்கிறார்.  மேலும் அவர், நரேந்திர மோடி சர்க்கார் ஏழ்மையை ஒழித்து வருவ தனால் ஏழைகளுக்கு எல்லா வித மான வாழ்க்கை மேம்பாடு திட்டமும்  கொண்டுவரப்பட்டு அமல்படுத் தப்படுவதினால் ஏழ்மை ஒழிக்கப் பட்டுவிடும். எனவே நூறுநாள் வேலைத்திட்டம் தேவையில்லை என்பது போல் பேசியுள்ளார்.  ஓர் இளைஞனின் கால்கள் இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு (70ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஏழைகளை இப்படித்தான் செய்து விட்டார்கள்) அந்த இளைஞனிடம்  கால் இல்லாத உனக்கு புதிய கால் களைப் பொறுத்தப்போகிறோம். அது  முன்பிருந்ததைவிட உனக்கு ஆக்க மும் ஊக்கமும் தரும். அதற்கான திட்டத்தை தீட்டியுள்ளோம். இனி  எவரெஸ்ட் சிகரத்திலும் நீ ஏறலாம்.  ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கத்தையும் வாங்கலாம் என்று ஒரு பைத்தியக்காரன் சொன் னதுபோல் உள்ளது அமைச்சரின் பேச்சு. வெந்தபுண்ணில் வேல் பாய்ச்  சலைப் போல் உள்ளது அவரின் உளறல். 

கடுமையான விவசாய பாதிப்பும்,  வேலையிழப்பும் ஏற்பட்டுள்ள இச்சூழலில் வேலை நாட்களை 200ஆக உயர்த்தவும், தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தவும் வேண்டியது அரசின் அவசரக் கடமை என்பதை மத்திய அரசு உணர்ந்து அதை நிறைவேற்ற வேண்டும். வறுமையை ஒழித்துவிட்டது போல வும், மீதமிருக்கும் வறுமையை சில  காலங்களில் ஒழித்துவிடப்போவ தாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுவிட்டு கடைக்கோடி மக்களுக்கான இந்தத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளக்கூடாது. அதை கைவிட வேண்டுமென்று விவசாயத் தொழிலாளர் சங்கம் அரசைக் கேட்டுக் கொள்கிறது.  மேலும் மாநில அரசு அரசாணை எண் 465ஐ (ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு இடங்களுக்கு மாற்று வீட்டுமனை வழங்குவது) எவ்வித காலதாமதமின்றி சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல ஒரு ஆண்டு காலத்திற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். பட்டா வழங்குவதற்கான மனை வழங்குவதற்கான உரிய ஏற்பாடுகளை உடன் இந்த அரசு செய்ய வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.  இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ். சங்கர் மற்றும் ஜி.கணபதி, சி.துரை சாமி, அ.பழனிசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;