வியாழன், அக்டோபர் 1, 2020

தமிழகம்

img

நான்கு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்

சென்னை,பிப்.14- தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம்  மற்றும் பதிலுரை 4 நாட்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார். தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்  னர், சட்டப்பேரவை நட வடிக்கைகளை முடிவு  செய்வது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடை பெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர்,“ நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் பிப்.17ஆம் தேதி  தொடங்கி 19ஆம் தேதி வரை  நடைபெறும்.  பிப். 20ஆம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலுரையாற்றுவார்” என்றார். 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர் பான கேள்விக்கு அது குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பேர வைத் தலைவர்,“ உச்சநீதிமன்றமே விளக்  கம் அளித்துவிட்டது” என்றார்.

;