திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

நீலகிரியில் தொடரும் கன மழை..மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழையின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

நீர்நிலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.  வெள்ளத்தில் சிக்கிக் குடியிருப்புகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் இடிந்துள்ளன.  உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வெள்ளத்தில் சிக்கித்தவித்த பழங்குடியினர் கிராம மக்களை மீட்புப்படையினர் காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

;