தமிழகம்

img

ரூ.6 ஆயிரத்து 862 கோடிக்கு துணை மதிப்பீடுகள் தாக்கல்

சென்னை, ஜூலை 21- 2019-20 ஆம் நிதியாண்டுக்கான  6  ஆயிரத்து 862 கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான முதல் துணை மதிப்பீடு களை சனிக்கிழமையன்று (ஜூலை20) பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், 2006 மார்ச் 31ஆம் நாள் வரை  நிலுவையில் இருந்த கூட்டுறவு விவ சாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வ தற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு 253  கோடி ரூபாயும், மக்காச்சோளப் பயிர் கள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  மாநில பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து 186 கோடி ரூபாயும், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கோடி 226 ரூபாயும் வழங்கப்படும். போக்குவரத்து கழகத்திற்கு 3 ஆயி ரம் பேருந்துகள் வாங்க 302கோடி ரூபா யும், மாணவர்களின் இலவச பேருந்து கட்டணச் சலுகையை ஈடுகட்ட 508 கோடி  ரூபாயும், போக்குவரத்து கழக ஓய்வூ தியர்களுக்கு இறுதிப் பலன்களை வழங்க ஆயிரம் கோடி ரூபாய் குறுகிய  காலக்கடன் தரவும்  இந்த துணை மதிப் பீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

;