திங்கள், நவம்பர் 23, 2020

tamilnadu

img

தோழர் பி.செல்வராஜ்  இல்ல திருமண விழா....  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்  செயற்குழு உறுப்பினரும் குஜிலியம்பாறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான  பி.செல்வராஜ்-எஸ்.சரஸ்வதி இல்ல திருமண விழா ஞாயிறன்று டி.கூடலூரில் நடைபெற்றது. மணமக்கள் அபிமன்யு-ஹேமாவதியை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.பாண்டி, கே. பாலபாரதி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர் சச்சிதானந்தம், கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அர.தண்டபாணி, பழனிசாமி மற்றும் கட்சியின் குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

;