வியாழன், நவம்பர் 26, 2020

tamilnadu

img

மேட்டூர் அணை நீர்மட்டம் 88.21 அடியாக சரிவு

சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத் துக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருந்ததால், அணை நீர்மட்டம் படிப் படியாக சரிய தொடங்கியது. கடந்த 12-ம் தேதி 101.73 அடியாக இருந்த நீர்மட்டம், கடந்த 22 நாட்களில் 13.52 அடி குறைந்து  88.21 அடியானது. நீர்வரத்து விநாடிக்கு 938 கனஅடியாகவும், நீர் இருப்பு 50.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.26 மி.மீ மழைதருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வியாழனன்று (ஜூலை 2) இரவு 26 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக பென்னாகரத்தில் 26 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, பாப்பிரெட்டிப்பட்டியில் 10 மி.மீட்டர் மழை, தருமபுரியில் 2 மி.மீட்டர், ஒகேனக்கல்லில் 1 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளிலும் வெள்ளியன்று இரவும் சனிக்கிழமை அதிகாலையும் மழை பெய்தது.

;