தமிழகம்

img

போராடும் உரிமையை பறிக்கும் காவல்துறை

சென்னை, ஜூலை 21- தமிழக சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு ஆகிய மானி யக்கோரிக்கைகள் மீது விவாதம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பி னர் ஐ.பெரியசாமி,“ ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறையின் செயல்பாடு சமீபகாலமாக மிகவும் மோசமாகி  வருகிறது. சமூகப் போராளி, சமூக ஆர்வலர்கள், மக்களின் கோரிக்கைகளுக்காக போராடு வோர் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, வழக்கறிஞர் நந்தினி  மது ஒழிப்புக்கு எதிராக போராடு கிறார். அந்த போராட்டத்தில் அவ ரது தாய், தந்தையும்கூட பங்  கேற்று வருகிறார். நீதிமன்றத்தை  விமர்சித்தார் என்பதற்காக சிறையில் அடைத்தனர். இதனால் அவரது திருமணமே நின்றது. காவல்துறை நினைத்தால் ஒரு  நாள் கழித்துக்கூட கைது செய்தி ருக்கலாம்.

காவல்துறையின் இந்த செயல் மனிதாபிமான மற்  றது” என்றும் கடுமையாக சாடி னார். அப்போது குறுக்கிட்ட சட்டத்  துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “அவரை கைது செய்தது காவல் துறை அல்ல. நீதிமன்றம்தான்” என்றார். தொடர்ந்து பேசிய பெரிய சாமி, “சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  காவல்துறை அதிகாரி பொன். மாணிக்கவேலுவுக்கு உரிய வசதி கள் செய்து கொடுக்கப்பட வில்லை என்றும் குற்றம் சாட்டி னார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர்,“ சிலை கடத்தல்  தடுப்பு பிரிவுக்கு அரசு செய்து  கொடுத்ததை பட்டியலிட்டதோடு, பொன்.மாணிக்கவேல் தன்னிச்  சையாக கைது நடவடிக்கை களில் ஈடுபடக் கூடாது என்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்ததையும் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய பெரியசாமி,“ தமிழ்நாட்டில் ‘கியூ’ பிரிவு காவல்துறை செயல்  பாடு திருப்தியாக இல்லை.

ஒரு சிலரை காப்பாற்ற அரசு செயல்படுகிறதே தவிர தமிழக மக்களை காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி மீதான ஊழல் புகார் தொடர் பான விசாரணையை சிபிஐ-க்கு  மாற்றி சென்னை உயர் நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறை யீடு செய்துள்ளது, கொட நாடு விவகாரம் பற்றியும் கடுமையாக சாடினார். அப்போது குறுக்கிட்ட முதல மைச்சர், ‘கியூ’ பிரிவு நிறைய கண்டு பிடித்துள்ளனர். எல்லா  ஆட்சியிலும் தவறு நடக்கிறது என்றும் கொடநாடு பிரச்சனை யில் கைது செய்யப்பட்டிருப்ப வர்கள் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல்  உள்ளிட்ட ஏராளமான வழக்கு களில் தொடர்புடையவர்கள் என்பதால் கைது செய்து சிறை யில் அடைத்தோம். அவர்கள் வெளியில் வர திமுகவினர்தான் ஜாமீன் வழங்கினார்கள் என்று விவாதத்தை திசை திருப்பினார்.

;