தமிழகம்

img

காளை இனங்களை அழிக்கும் மசோதா: எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றம்

சென்னை, ஜூலை 21-  சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று (ஜூலை 20) இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி, இந்த மசோதா விவசாயிகளுக்கு விரோதமானது. இந்த சட்டத்தால் 40 ரூபாய் மதிப்புள்ள சினை ஊசி 2ஆயிரம் ரூபாயாக உயரும். நாட்டுப்புற மாடு இனங்கள் அழியும். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிய தடை உள்ளபோது, காளை இனங்களே இல்லாத நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. பாரம்பரிய காளை இனங்கள் அழியும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எடுத்துக்கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், விவசாயிகளுக்கு மானியம்  கொடுத்துதான் சினை ஊசி போடப்படும். நோயின்றி மாடு களை பிறக்க வைப்பதே இத்திட்டத்தின நோக்கம். செயற்கை கருவூட்டல் உறைவிந்து தயாரிக்கும் நிறுவனங்கள் முறைப்ப டுத்தப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெ டுப்பு மூலமாக  மசோதா நிறைவேறியது. உள்ளாட்சி மசோதா  இதேபோன்று உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவ லர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீடிக்கும் மசோ தாக்கள், தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்கள் ஆகியவற்றிற்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் மசோதா நிறைவேறியது. மேலும், ஆவடி மாநகராட்சியாக நிலை உயர்த்தும் மசோதா,  மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் மசோதா உள்ளிட்டு  15 மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.

;