செவ்வாய், செப்டம்பர் 29, 2020

தமிழகம்

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து, ஆதரவு தெரிவிப்பு

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குமரலிங்கத்தில் உள்ள உடுமலை சங்கரின்  இல்லத்தில் அவரின் தந்தை வேலுச்சாமி, தம்பிகள் விக்னேஸ்வரன், யுவராஜ் ஆகியோரை திங்களன்று (ஆக.17)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து, ஆதரவு தெரிவித்துப் பேசினர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியம், எஸ்.ஆர்.மதுசூதனன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், தீஒமு மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்சலிங்கம், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.வடிவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், ஒன்றியச் செயலாளர் மகுடேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;