செவ்வாய், செப்டம்பர் 29, 2020

தமிழகம்

வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்- கவலைப்படாத மோடி அரசு செப். 5 தமிழக கிராமங்களில் மக்கள் போராட்டம்

சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் அழைப்பு

சென்னை, ஆக.28 - கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து ள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசைக்  கண்டித்து செப்டம்பர் 5 அனைத்துக் கிராமங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,  விவசாயிகள் சங்க  மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம். விவசாயத்தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நாசகரகொள்கைகளின் விளைவாக உழைக்கும் மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இந்திய பெருமுத லாளிகளுக்கும், அந்நிய கார்ப்பரேட் முத லாளிகளுக்கும் சாதகமான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்தொற்று ஆபத்தை காரணம் காட்டி அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள் என அனைத்து பகுதி மக்கள் படும் துயரங்களின் மீது மோடி அரசு கவலைப்படவில்லை. அதேநேரத்தில் இந்திய பெருமுதலாளி களும், அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளும் கொள்ளை லாபத்தை ஈட்டக்கூடிய வகையில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது, தொழிலாளர் சட்டங்களை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் மின்சார சட்டதிருத்தம், அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்தம், வேளாண் விளைப்பொருட் ஊக்குவிப்பு சட்டம்,  விவசாயிகளுக்கு விலை உத்தரவாத மற்றும் வேளாண் சேவை மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம்,  புதிய கல்விகொள்கை,  சுற்றுச்சூழல் பாதிப்பு சட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க, முன்கள பணியாளர்களை பாதுகாக்க, ஊரடங்கினால் வேலையிழந்து வருமானத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி அளிக்க போதுமான நிதியினை அளிக்க மறுத்து வருகிறது. அதேநேரத்தில் நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முனைகளில் சர்வாதிகார போக்குடன் மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்  இணைந்து  ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய இயக்கத்தை நடத்தியுள்ளன. இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக,   செப்டம்பர் 5 அன்று   மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளின் பேரில் நாடு தழுவிய  தொழிலாளர்-விவசாயி, விவசாய தொழிலாளர் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள் 2018 ஆம் ஆண்டில் தலைநகர் தில்லியில் நாடாளுமன்ற வீதி யில் லட்சக்கணக்கான தொழிலாளர், விவ சாயிகள் விவசாய தொழிலாளர்  பங்கேற்பு டன் நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இயக்கத்தை குறிப்பிடும் நாளாகும்.  மருத்துவ சேவையை அனைவருக்கும் விரிவுப்படுத்த வேண்டும், கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்  இழந்துள்ள  அனைவருக்கும் இலவச  ரேசன் பொருள்கள் வழங்க வேண்டும்.  அனைத்து குடும்பங் களுக்கும்  அடுத்த ஆறு  மாதங்களுக்கு  மாதத்திற்கு ரூ.7500 நிவாரண  உதவி தொகை   வழங்க வேண்டும், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில்  200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும்,  அத்தியாவசியப் பொருட்கள், பண்ணை வர்த்தகம், மின்சாரம் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய கல்வி கொள்கை சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்,  பொதுத்துறை தனியார் மய நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 5 அன்று தமிழகத்தில் கிராமங்களில் சமூக  இடைவெளியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடை பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;