சனி, செப்டம்பர் 19, 2020

சினிமா

img

மும்பையில் போஜ்புரி நடிகை தற்கொலை...  முகநூலில் வீடியோ வெளியிட்டு உயிரிழந்தார்.. 

மும்பை 
பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுபாமா பதக் (வயது 40). இவர் போஜ்புரி நடிகையாவர். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். வேலை தேடிச் சென்ற இடத்தில் (மும்பை) நடிகையாக மாறி குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர்.   

இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் அனுபாமா நேற்று (வெள்ளி) திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முதல்நாள் முகநூலில் தனது ரசிகர்களுக்கு கடைசியாக உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட அறையில் அவர் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  

முகநூல் பக்கத்தில் நான் ஏமற்றப்பட்டதாகவும், இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.   

;