புதன், செப்டம்பர் 23, 2020

சினிமா

img

பிரபல வில்லன் நடிகர் அனில் முரளி காலமானார்... 

கொச்சி
தென்னிந்திய திரையுலகின் முன்னணி வில்லன் நடிகரான அனில் முரளி (56) கேரளாவைச் சேர்ந்தவர். சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு வந்த அனில் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல்வேறு வேடங்களில் இவர் நடித்தாலும் அவரது மூக சாடைக்கு கச்சிதமாக இருப்பது வில்லன் கதாபாத்திரம் தான். இதனால் அந்த வேடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்.  தமிழில் 6 கேண்டில்ஸ், நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, கணிதன், தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் - 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசி படம் வால்டர். 

இந்நிலையில் கல்லீரல் குறைபாட்டால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  இன்று (வியாழன்) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த அனில் முரளிக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

;