வியாழன், அக்டோபர் 22, 2020

சினிமா

img

'பாரம்' படத்திற்காக போஸ்டர் ஒட்டிய இயக்குனர் மிஷ்கின்

சென்னை 
பெண் இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கிய 'பாரம்' என்ற திரைப்படம் 66-வது தேசிய விருதை வென்றது. திரைக்கு வரமால் தேசிய விருதை வென்று புதிய வரலாறு படைத்த 'பாரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெள்ளியன்று 'பாரம்' திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்படம் வெளியாகுவதற்கு முன் இயக்குனர் மிஷ்கின்,"'பாரம்' படம் வெளியாகும்போது விளம்பரத்திற்காக நான் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன்" எனப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.சொன்னபடியே மிஷ்கின் 'பாரம்' படத்திற்காக தனது சொந்த செலவில் போஸ்டர் ஒட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக  வருகின்றன. என்னுடைய ‘பாரம்’ படம் மீது இயக்குனர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது என அப்படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி தெரிவித்துள்ளார்.

;