சனி, செப்டம்பர் 19, 2020

கல்வி

img

யுபிஎஸ்சி-யின் தலைவராக பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்றார்...

புதுதில்லி 
நாட்டின் உயர்ந்த பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு  போட்டித் தேர்வு நடத்தும் மத்திய குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், புதிய தலைவராக யுபிஎஸ்சியின் உறுப்பினராக உள்ள டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அரவிந்த் சக்சேனா யுபிஎஸ்சி-யில் இருந்து விடைபெற்ற அடுத்த    சில மணிநேரங்களில் பிரதீப் குமார் புதிய தலைவராக பதவியேற்றுக்கொண்டார். மே 12, 2021-ஆம் ஆண்டு வரை அவர் இந்த பொறுப்பில் இருப்பார். 

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் பொது சேவை ஆணையங்களின் தலைவராக இருந்த ஜோஷி  2015-ஆம் ஆண்டு யுபிஎஸ்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.

;