கல்வி

img

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் செவிலியர் பணி காலியிடங்கள்: 1234

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் உள்ள 1234 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Village Health Nurse (VAN)/ Auxiliary Nurse Midwife (ANM)மொத்த காலிப்பணியிடங்கள்: 1234

சம்பளவிகிதம்: ரூ.19,500 - 62,000

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ SCA/ BC/ BCM/ DNC பிரிவினர்கள் 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்த ஞறுனு பிரிவினர் 50 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse/ Midwife/ Multipurpose health worker பாடப்பிரிவில் குறைந்தது 2 வருட படிப்பை முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 15.11.2012 தேதிக்கு முன் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட கல்வித்தகுதியை பெற்றிருப்பவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: 10 ஆம் வகுப்பு, +2 நர்சிங் படிப்பில் பெற்றுள்ள  மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ BC/ BCM/ MBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC/ SCA/ ST/ DAP(PH)/ DW பிரிவினர்களுக்கு ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.11.2019.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;