கட்டுரை

img

கொரோனா அதிர்ச்சி: முதலாளித்துவ வரலாற்றின் மாபெரும் நெருக்கடி - பேராசிரியர் விஜய் பிரசாத்

கேள்வி: கொரோனா கிருமியினால் இது வரையில்லாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியினை நாம் சந்தித்துவருகிறோம். நாம் சமீபத்திய ஆண்டுகளில் பார்த்துவரும் அரசி யல் மற்றும் பொருளாதார அமைப்பினைப் பற்றி இந் நோய்த் தொற்று நமக்கு என்னவெல்லாம் வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது? முதலாளித்துவ வர லாற்றின் மாபெரும் நெருக்கடியை நாம் எதிர் கொண்டிருக்கிறோமா? பதில்: முதலில், தங்களது கடைசி கேள்விக்கான பதில், ஆம் முதலாளித்துவ வரலாற்றின் பூதாகர நெருக்கடி இது.

உலகளாவிய கொரோனா தொற்று பரவல், சமீபத்திய வரலாற்றில் நமது சமூகக் கட்டமைப்பின் மீது கவனக்குறைவின் காரணமான மிகப்பெரிய வாழ்க்கை முடக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள் ளது. உலகத் தொழிலாளர்களில் குறைந்தது பாதிப் பேர் வேலையின்றி இருக்கின்றனர். மேலும் அவர்க ளது பணிநீக்கம், வளர்ச்சி விகிதத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது; இதுவே, சமூக வளர்ச்சியை உரு வாக்குவது வெறுமனே மூலதனம் மற்றும் அதன் கண்டுபிடிப்புகளால் மட்டுமல்ல, உற்பத்தியை உருவாக்கும்  உழைப்பினால்தான் எனும் மார்க்சிய நிலைப்பாட்டிற்கான ஆதாரம். உழைப்பே மதிப்பினை உருவாக்குகிறது, அம்மதிப்பின் விளை வாக சேர்க்கப்பட்ட செல்வத்தினைக் கொண்டு உழைக்கும் மக்களுக்கெதிரான சர்வாதிகாரம் இயக்கப்படுகிறது; உழைப்பு முடக்கப்படுவது- இத்தகைய எதிர்பாரா சூழலிலும் கூட - மார்க்சிய நிலைப்பாட்டினை நிரூபிக்கின்றது. 

உலகமயமான “சிக்கனம்”

கடந்த ஐம்பது ஆண்டுகளாக, முதலாளித்து வக் கட்டமைப்பு இலாபநோக்கத்துடன் முன்னேற முயற்சித்துக் கொண்டிருக்கிறது; நன்மைகள் விளைவிக்க சமூக நிறுவனங்களைக் காவு வாங்கும் ஒரு கட்டமைப்பினை உருவாக்கியுள்ளது. குறைந்த முதலீடு மற்றும் லாபத்திற்காக கார்ப்பரேட் மூல தனத்துடன் தனித்தனித் தொழிற்சாலைகளில் விநி யோகச் சங்கிலிகளுடன் உற்பத்தியும் உலகமயமாக் கப்பட்டது என்பது நமது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; ஏகபோக உரிமை கொண்ட - பன்னாட்டு நிறுவனங்கள்  அறிவுசார் சொத்துரிமை மற்றும் விநியோகச் சங்கிலியின் மீதுள்ள தங்களது கட்டுப்பாட்டினைக் கொண்டு நிதி இருப்புகளை ஒன்றுதிரட்டி, அதை ஆக்கப்பூர்வமான முத லீட்டில் செலுத்தாமல், சூதாட்டக் குழுமங்களுக் கும் வரி புகலிடங்களுக்கும் திசைதிருப்புகின்றனர். இலாபத்தை வரிவிதிப்பிலிருந்து தள்ளிவைப்ப தால், அரசாங்கங்களுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் (அர சாங்கங்கள் போதிய நிதி வைத்திருக்கவேண்டும் என்ற கட்டளைக்குட்பட்டு)  மற்றும் ஏகாதிபத்திய அதிகாரத்தினால்  (ஐஎம்எப் வழியாக) பொது நிதி ஒதுக்கீட்டைக் குறைத்திட நிர்ப்பந்திக்கப்படு கின்றன. இதனால் ‘சிக்கனம்’ என்பது உலகம் முழுவதுமுள்ள அனைத்து மக்களும் அறிந்திருக் கும் ஒரு வார்த்தையாக மாறியுள்ளது.இச்சிக்கன நிலைப்பாடு குறிப்பாக கல்வி, பொதுசுகாதாரம் போன்ற சமூக நிறுவனங்களுக்கு எதிராகவும், போக்குவரத்து, முதியோர் நலன் போன்ற பொதுச் சேவைகளுக்கு எதிராகவுமே நிறைவேற்றப் பட்டது. பொது சுகாதாரம் மற்றும் பொது மருத்து வத்திற்கான குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும் மருந்து உற்பத்தித் துறையை தனியார்மயமாக்கியது- இரண்டும் முதலாளித்துவ உலகை இந்நோய் தொற்றிற்கு முன்பே பலவீனமாக்கிவிட்டிருந்தன. இத்தொற்றின் வருகையால் அவை முற்றிலுமாக வீழ்ந்திருக்கின்றன.

கடைசியாக, அரசாங்க கொள்கையிலிருந்து சமூகநலன் என்ற உயரிய கோட்பாட்டை வெளி யேற்றியதன் விளைவாக, தற்போதைய நெருக்கடி நிலையில் மக்களுக்கு உதவத் தேவையான வசதி கள் அரசுகளிடம் இல்லாது போயிற்று; தொழிலாளர் சங்கங்கள் போன்ற பொது அமைப்புகளை முதலா ளித்துவ நாடுகள் வலுவிழக்கச் செய்ததன் விளை வாக நம்மிடையே நிலவிய மக்கள் இயக்க வழக் கங்களும் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. இதுவே, கியூபா, கேரளா போன்ற இடங்களில் அரசுடன் இணைந்து மக்கள் இயக்கங்களும் சீராகச் செயல் படும் வேளையில், முதலாளித்துவ நாடுகளில் மக்கள் பெரிதும் அரசின் நடவடிக்கைகளை மட்டுமே நம்பி இருப்பதன் காரணம். இம்முதலா ளித்துவ நாடுகளிலும் , இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே அரசாங்க அனுமதியோ உதவியோ கோரா மல் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன; இன்னும் கூறவேண்டுமானால். இத்தகைய அத்தி யாவசிய நடவடிக்கைகளுக்காக அவர்கள் வசை பாடல்களையே எதிர்கொள்கிறார்கள். இந்நெருக்கடி நேரத்தில், இதை சமாளிக்க மக்களின் திறனை மேம்படுத்துவதற்கான; இயல்பு வாழ்க்கையில் மக்களின் திறமைகளை வளர்த் தெடுப்பதற்கான வீரியம் முதலாளித்துவத்திற்கு அறவே இல்லை என்பது சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

குறைந்தபட்ச சமூகநலதிட்டங்கள்

கேள்வி: மறுபக்கம், உலகம் முழுவதும் பல அரசாங்கங்கள் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, இந்நெருக்கடியை மக்கள் சமாளிக்க ஏதுவாக குறைந்தபட்ச சமூகநலத் திட்டங்களை உறுதி செய்யவும் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளனவே? 

பதில்: தங்கள் முதலாளி வர்க்கத்திடம் கைகட்டி நிற்கும் அரசுகளிடமிருந்து இந்நெருக்கடிக்கு ஒத்திகை பார்க்கப்பட்ட பதில்கள் மட்டுமே உள்ளன. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பெருநிறுவ னங்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிப்பது என்ற பெயரில், பணத்தை வாரியிறைப்பது மட்டுமே. இந் நெருக்கடி சமயத்தில், பணப் புழக்கத்தில் பிரச்சனை ஏற்படவேயில்லை. இவ்வுலகடங்கில் வேலைகள் மறைவதனால்,மக்கள் மீது திணிக்கப்பட்ட பொது வேலை முடக்கத்தினாலேயே வரலாறு காணாத  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவையே தற்போது நிலவும் நெருக்கடியின் அடிப்படைக் காரணிகளே யன்றி, வெற்றுக் காகிதங்கள் கொண்டு தங்களுக்குப் பணமளிக்குமாறு நிதிநிறுவனங்களிடம் முறையி டும் (2009 நிதிநெருக்கடியின்போது ஏற்பட்டதுபோல) முதலீட்டாளர்களின் பதற்றமல்ல; 2020-இல் அர சாங்கங்கள்  பணப்புழக்க பிரச்சனைபோல் எதிர் கொள்ளும் இந்த நெருக்கடி உண்மையில் ஒரு வேலையின்மை நெருக்கடி. மேலும் கோடிகோடி யாக அளிக்கப்படும் பணம், கொரோனாவினால் ஏற்பட்ட மந்தநிலையை சரிசெய்யப் பயன்படாமல், சக்திவாய்ந்த பெருநிறுவனங்களின் கைகளுக்குச் செல்கின்றன. உழைக்கும் வர்க்கத்தின் அவசி யத்தை ஆளும் வர்க்க அரசுகள் அறியும்; இந்த அரசுகளால் மக்களுக்கு அளிக்கப்படும் எந்தவொரு நிவாரணத்தின் பின்னணியில் இருப்பது மனிதாபி மானமல்ல, முதலாளித்துவத்தின் சுயநலமே.

பசிக்கொடுமையை  அழிக்க முற்படாத...

நாம் இத்தருணத்தை முதலாளித்துவ நாடுகள் எவ்வாறு பெரும்பாலான மக்களை உணவின்றித் தவிக்கவிட்டுவிட்டன என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், உலகின் எந்தவொரு மூலையையும் ஒரு மணி நேரத்திற்கும் கீழ் சென்றடைந்து தாக்கும் அதி விரைவு ஒலிவேக ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன்கள் இருந்தும் பசிக்கொடுமையை அழிக்க முற்படாத முதலாளித்துவம் போன்ற ஒரு மனித நாகரிகத்தில்  பெரும் பயங்கரம்  இருக்கிறது. இது ஒரு திட்டவட்டமான தார்மீகத் தோல்வி. எனினும் இதுகுறித்த மக்களின் கோபம் போதுமா னதாக இல்லை. மக்கள் பசியுடன் வாடுவதை எண்ணி ஏற்படும் கோபத்தை நான் கூறவில்லை, இத்தகைய சீரான ஆயுதங்கள் தயாரிக்கமுடிந்த,  அளவுக்கதிகமாக உணவு தயாரித்தும், அதை பண மில்லாதோருக்கும் கிடைக்கச்செய்வதைவிடுத்து வீணடிக்கும் ஒரு கட்டமைப்பின் மீதான கோபத்தைப் பற்றிப் பேசுகிறேன். ஒரு சமூகத்தின் தார்மீகச் சிறப்பு அதன் அரசியலமைப்புகளிலோ, தத்துவ ஞானிகளின் செவ்வியல் படைப்புகளிலோ அல்ல; ஒரு சமூகத்தின் ஒழுக்கவிதிகளை மதிப்பி டுவது. அது கல்வியின்றி, உணவின்றி வாழும் தனது பெரும்பான்மை மக்களை நடத்தும் விதத்திலுள்ளது.  நாம் முதலாளித்துவ சமூகங்களில் நிலவும் அதிகாரச் சமநிலையை இப்போது மாற்றியமைக்கா விட்டால், தற்போதுள்ள கொள்கைகளும் இன்னும் கொடிய கொள்கைகளுமே வரும் காலத்திலும் நிலவும்.

கேள்வி: உலகம் இனி முன்பு போல் இருக்காது, நவதாராளமயமாக்கல் கொள்கையின் தீமைகளை இத்தொற்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என்று பலர் கூறுகின்றனர். எனினும், பொது வளங்களில், நிதிகளில் பெரும்பான்மை வர்த்தக கட்டமைப்பிற்கும், பெருநிறுவனங்களுக்குமே அளிக்கப்பட்டு, நிதிமூலதனத்தின் குவிப்பு இன்னும் வலுவாக்கப்படுகிறது; அதே நேரத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் தொழிலாளர் உரிமைகள் தளர்த்தப்படுவதைப் பார்க்கிறோம். இம்முரண்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது?

பதில்: முதலாளித்துவ அரசுகள் அளிக்கும் வளங்களில் பெரும்பான்மையானவை, பெருநிறுவ னங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கே போ யுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இது முதலாளி வர்க்கம் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து நாடுகளி லும் நடந்துள்ளது. நிவாரணங்கள் அளிக்கப்படு கின்றன, ஆனால் அவை போதுமானதாக இல்லை. கண்காணிப்புக் கட்டமைப்புகளை பலப்படுத்த வும்,  சமூகச் செயல்பாட்டாளர்களை கைதுசெய்ய வும், தொழிலாளர் சட்டங்களை வலுவிழக்கச்  செய்யவுமே இந்நெருக்கடி உபயோகிக்கப்பட்டுள் ளது. ஏனெனில் இவையனைத்துமே ஒரு முதலா ளித்துவ கட்டமைப்பின் இயல்பான கூறுகள்: அர சாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியவுடன் முதலாளி வர்க்கம் அதன் இருப்பை குறுகிய காலத் திற்கு உறுதி செய்துகொண்டு, அதற்கு நிரந்தர லாபங்கள் தரும் கொள்கைகளையும் சட்டங்களை யும் நிறுவ  மக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும். 

இந்தியாவில் அரசு தற்போது வேலை நேரத்தை பத்து அல்லது பன்னிரண்டு மணிநேரமாக உயர்த்தப் பார்க்கிறது. 19-ஆம் நூற்றாண்டை நோக்கி பின்நகர்த்தும் இச்செயல் கொடூரமானது. தொழிலா ளர்களின் உழைப்பைச் சுரண்டுதல் என்பது பணி யிட வன்முறை மற்றும் குழந்தைத் தொழிலாளி முறை இன்னும் தொடரும் இந்தியா போன்ற நாடு களுக்கொன்றும் புதிதல்ல. ஆனால் நெருக்கடி, முதலாளிகளின் முகத்திரையைக் கிழித்தெறியும் இத்தருணத்தில், அவர்களால் செய்ய முடிந்தது அரசாங்க கருவூலத்திலிருந்து மேலும் பணத்தைச் சுருட்டுவது மற்றும் உழைக்கும் வர்க்கத்திடம் அள வுக்கதிகமான உழைப்பை உரிமைகோருவது மட்டுமே; இதைத்தவிர அவர்களுக்கொன்றும் தெரியாது.

போருக்கு ஈடான  தீவிரப் போட்டி

நெருக்கடி நேரத்தில் முதலாளி வர்க்கத்தினர் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்களென்று எதிர்பார்ப்பது முதலாளித்துவத்தின் அடிப்படை யைச் சரியாகப் புரிந்துகொள்ளாதிருப்பதாகும். லாபத்தை அதிகரிப்பது மற்றும் போருக்கு ஈடான தீவிர போட்டி மனப்பான்மையைச் சுற்றியே முத லாளித்துவம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது; இது பேராசையெனும் மனித இயல்பை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, அதீத முக்கியத்துவம் அளிக் கிறது. எனவே, இதுபோன்ற கொள்கைகள் முத லாளி வர்க்கத்திற்கும், அது ஆதிக்கம் செலுத்தும் அரசுகளுக்கும் அவசியமாகின்றன.  இவையேற்படுத்திய சேதம் பயங்கரமானது. உலகின் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 81 சதவீதம் பேர் - அதாவது 270 கோடி பேர்  - வேலையின்றி, குறைந்தது 3.4 டிரில்லியன் டாலர் வருவாயை இழக்க நேரிடும் என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவிக்கிறது. உலகளாவிய வர்த்தகம் குறைந்தது 32 சதவீதம் மந்தமடையும் என்று உலக வர்த்தக அமைப்பு கூறுகிறது. இவையனைத்தும் நாம் மிகக் கூர்ந்து கவனிக்கவேண்டியவை. உற் பத்தியின் இன்றியமையாத ஓர் அங்கமாய் மாறி விட்ட விநியோகச் சங்கிலிகள் மிகுந்த சேதத்தைச் - சில பகுதிகள் மீட்கமுடியாத அளவிற்கு - சந்திக்க  நேரிடும் என்பதையே இவ்வெண்கள் கூறுகின்றன.  உலகடங்கினால், வேளாண் உற்பத்தி பாதிக்கப் பட்டு, உலகில் பல பகுதிகளில் பஞ்சம் ஏற்பட வாய்ப் புள்ளது. இவையனைத்தும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் அல்ல.

இப்பிரச்சனையை சமாளிப்பது குறித்து எந்த வொரு திட்டமும் முதலாளித்துவ  கட்டமைப்பிடம் இல்லை. சந்தையில் பணப்புழக்கத்தினை அதிக ரிக்கச் செய்வது, சீனாவை மிரட்டுவது, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக இராணுவ அடக்குமுறையைக் கையாள்வது போன்ற அரதப் பழைய தந்திரங்களையே அவர்கள் மீண்டும் கையாள்கின்றனர். இவற்றை விடுத்து, இதுபோன்ற தொற்று நேரங்களில் வர்த்தகத்தை எவ்வாறு நிர்வ கிப்பது, பொருளாதாரச் செயல்பாடுகளை உலக ளாவிய வர்த்தகத்தை அதிகம் சாராமல் இருக்கு மாறு எவ்வாறு மாற்றுவது, ஒரு பூதாகர உலகளா விய பொருளாதாரத்தை விடுத்து பல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டமைப்பது, கோடிக்க ணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை வர்த்தகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாகக் குறுக்கி விடாமல் பொருளாதார செயல்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் மக்களாக பார்ப்பதை உறுதி செய்வது ஆகியவை குறித்து சிந்திக்க வேண்டும். பொது சுகாதாரத்திற்காக பெரும் நிதி ஒதுக்கீடு இருக்குமா? இதுவே தற்போதைய உடனடித் தேவை. இது குறித்து எந்தவொரு உரையாடலும் பொதுத் தளத்திலிருப்பதாகத் தெரியவில்லை. நெருக்கடி யின்போது அனைவரும் செவிலியர் புகழ் பாடு கின்றனர். நெருக்கடி நிலை கடந்தவுடன் செவிலி யர்களும் மறக்கப்படுவர். இதுவே முதலாளித்துவக் கட்டமைப்பின் மாபெரும் தோல்வி.

இணையமயமாகா வியாபாரங்கள் அழியும்நிலை

கேள்வி: உலகடங்கு காலத்தில் வேகமான வளர்ச்சி கண்டிருக்கும் துறை தொழில்நுட்பம். எனில், அமேசான் ஜெஃப் பெசோஸ் அடுத்த கட்டத்தில் உலகின் முதல் பெரும் மகா கோடீஸ்வ ரர் (டிரில்லியனர்)  ஆகப்போவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. இதுபோன்ற ‘தளம்சார் முத லாளித்துவத்தின்’ (platform capitalism) அசுர  வளர்ச்சி எதைக் குறிக்கிறது? மேலும் இதன் விளைவுகள் என்னென்ன?

பதில்: இவ்வுலகடங்கிற்கு முன்பே,  முக்கிய தளம்சார் நிறுவனங்கள் (இவற்றில் மிகப்பெரியது அமேசான்) சில்லரை வணிகச் சந்தையை கிட்டத் தட்ட முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன; மக்க ளை அனைத்து பொருட்களையும் இணையம் வழியே வாங்கவைப்பதே அவர்களது குறிக்கோள். இதன்மூலம் இணையமயமாக்கப்படாத வியா பாரங்கள் அழிக்கப்படும். இவ்வுலகடங்கு சமயத் தில் மேலும் ஏராளமான மக்கள் இத்தளங்கள் மூலம் பலதரப்பட்ட பொருட்களை வாங்கி பழகி விடுவர்; இதன் சௌகரியத்தை உணர்ந்து பலர் ஊர டங்கு முடிந்த பிறகு கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் பழக்கத்திற்குத் திரும்ப மாட்டார்கள். மேலும் மேலும் பொருட்களும் சேவைகளும் இணையம் வழியே நிரந்தரமாக விற்கப்படவேண் டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இங்குள்ளது. இணைய வசதி மற்றும் மின்சார வசதி பரவியுள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் கண்டிப் பாக இப்பழக்கம் விரைவில் ஆதிக்கம் செலுத்தும் என்றாலும் இணையசேவை சரியாக இல்லாத உலகின் பல பகுதிகளில் இம்மாற்றம் நிகழ வாய்ப் பில்லை. எனினும் இத்தளம்சார் நிறுவனங்கள், மொத்தமாகப் பார்க்கும்போது அதிகளவில் மக்க ளுக்கு வேலையளிக்கும் குடும்பத் தொழில்களை அழித்துவிடும் ஆபத்துஉள்ளது. பலதரப்பட்ட கடை கள் மூடப்படுவதால், நகரங்களின் சமூகச் சூழல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சில்லரை வியாபா ரங்களுக்கு இதனால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உலகிற்கே வழிகாட்டியது

கேள்வி: இத்தொற்றுடன் சேர்ந்து வளர்ந்து வரும் இன்னொரு பிரச்சனை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையேயான மோதல். சீனா வலுப் பெற்று, அமெரிக்க ஆதிக்கம் வலுவிழக்கும் நிலை வருமாயின் உலக அரசியல்மேடையில் நாம் எவ்விதமாற்றத்தை எதிர்பார்க்கலாம்?

பதில் : நமக்கு முன் ஒரு பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது சீனாவே உலகின் உற்பத்தி மையம்; இதன் மூலம் கிட்டிய மிகுதி களைக் கொண்டு அனைத்துக் கண்டங்களிலும் சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொண்டுள் ளது; அதன் வெளியுறவுக் கொள்கை பரஸ்பர லாபத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதன் மூலம் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளின் நல்லுறவைப் பெற்றுள் ளது.மேலும்,கோவிட்-19 நெருக்கடிக்கெதிரான சீனாவின் செயல்பாடு பாராட்டுக்குரியதாக வுள்ளது. மனிதத் தொடர்பின் மூலம் கொரோனா பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தவுடனே சீன அரசு,1.1 கோடி மக்கள் வாழும் வுஹான் நகரில் ஊரடங்கு உத்தரவிட்டு, பிறகு படிப்படியாக ஊரடங்கு அமல்படுத்தியது மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பிற மக்கள் அமைப்புகள் ஆகியோரின் உதவி மற்றும் ஒத்து ழைப்பை நாடி மக்கள் செயல்பாட்டையும் ஒருங்கி ணைத்தது. இதன் மூலம் சீனா, உலகிற்கே வழி காட்டியது.

மறுபக்கத்தில்  அமெரிக்கா, நெடுங்காலமாக தனது உலக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வ தற்காக எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராக விருக்கும் நாடு. 1964-இல் பிரேசில் நாட்டில் எழுந்த மக்கள் இயக்கங்களை முடக்க கம்யூனிசத்திற் கெதிராக பயங்கரவாத சக்திகளை பலப்படுத்தும் சதி யொன்றில் அமெரிக்கா பங்குகொண்டு, பிறகு இம் முறையை தென்அமெரிக்கா  முழுதும் பரப்பியது;  உலகிலேயே எந்தவொரு நாட்டையும் விட பன்மடங்கு பெரிய இராணுவத்தை அமெரிக்கா கொண்டுள்ளதிலேயே வன்முறை உதிக்கிறது. இன்னும் அதிவிரைவு ஒலிவேக ஏவுகணைகள் போன்ற புதிய ஆயுத கட்டமைப்புகளை உரு வாக்குவதில் முனைப்புடன் இருக்கிறது. ஆயுதங்க ளைக் குறைக்க வலியுறுத்தும் கோட்பாடுக்கு முற்றி லும் எதிரான இச்செயல் மிகவும் ஆபத்தானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சீனா முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளதில் அமெ ரிக்கா ஆத்திரமடைந்துள்ளது. திறமையான வலு வான தொழிலாளிகளை உலகிற்கு அளித்துக் கொண்டு உலகின் பட்டறையாக சீனா இருந்தவரை யில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 5ஜி போன்ற உயர்தொழில்நுட்பத்தில் முன்னோடியாக சீனா உருவெடுத்திருப்பது அமெரிக்க ஏகாபத்தி யத்திற்கெதிரான நேரடி அச்சுறுத்தலாகப் பார்க்கப் படுகிறது. தற்போது நிகழ்ந்த வர்த்தக மோதலையும், கோவிட்-19 தொற்றை சீனாவின் பெயரை தூற்ற அமெரிக்கா உபயோகித்து, விநியோகச் சங்கிலியை சீனாவிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதையும் இதன் அடிப்படையிலேயே அணுகவேண்டும். அமெரிக்க ஆதிக்கக் கட்டமைப்பிற்கு எதிராக வளர்ந்துவரும் சீனாவின் எழுச்சியின் விளை வாகவே இவ்வன்முறையைத் தூண்டும் பேச்சு எழுகிறது என்பதையும், மேலும் இவ்வன்முறைப் பேச்சுடன் ஆபத்தான ஆயுதங்களை இணைத் தால் அது தெற்கு-சீனக் கடல்பரப்பின் மீது போரில் போய்முடியுமென்பதையும் பார்க்கலாம். இவை ஆபத்தான காலங்கள். 

சாதாரண செயல்பாடும் கடினமாகும் காரணமும்

கேள்வி:  கொரோனாக் கிருமியின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனா, வியட்நாம், இந்தியாவில் கேரளா, போர்ச்சுகல், கியூபா மற்றும் வெனிசுலா போன்ற சோசலிச நாடுகள் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டுள்ளதைக் காண்கிறோம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?

பதில்: சீனா, வியட்நாம், கேரளா, கியூபா மற்றும் வெனிசுலா போன்ற சோசலிச கட்டமைப்புகளைப் பார்த்தீர்களென்றால், இந்நெருக்கடிக்கு வேறுமாதி ரியான அணுகுமுறை தென்படும்.  இவ்வேறு பாட்டை நாங்கள் கொரோனாஅதிர்ச்சி என்கி றோம்.கொரோனா அதிர்ச்சி என்பது எவ்வாறு ஒரு கிருமி இவ்வுலகத்தையே கவிழ்த்திப் போட்டுள் ளது என்பதைக் குறிக்கும்;  உலகின் சோசலிசப் பகுதிகள்  இந்நெருக்கடியை எதிர்ப்பதில் துடிப்புடன் இருக்கையில், முதலாளித்துவக் கட்டமைப்பில் சமூக ஒழுங்கு எவ்வாறு நிலைகுலைந்துள்ளது என்பதைக் குறிக்கும். சோசலிச கட்டமைப்பில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை உன்னிப்புடன் ஆராய்ந்து மக்களுக்குத் தெரி யப்படுத்த வேண்டியது மிக அவசியம்; இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியிலிருக்கும் கேரளாவின் செயல்பாடு மொத்த ஜி20 தலை மையின் செயல்பாடை விட நம்பிக்கையூட்டு வதாகவுள்ளது.

இடதுசாரிகள் தற்போது இருதிசைகளில் பார்ப்பது அவசியமாகிறது. முதலில், மிகவும் எளிதில் தொற்றக்கூடிய நோயுடன் முதலாளித்துவக் கட்டமைப்பின் குறைந்த வசதிகளைக் கொண்டு போராடிக்கொண்டிருக்கும், மருத்துவர்கள், செவி லியர்கள், முதலுதவியாளர்கள், மருத்துவஊர்தி ஓட்டுநர்கள்போன்ற நமது மருத்துவ மற்றும் சுகாதா ரப் பணியாளர்களுக்கு தேவையான உதவியை அளிப்பதற்கு முயல வேண்டும். ஒரு சமூகத்தின் விழுமியங்கள் அதன் அரசியலமைப்பில் இல்லை; அதன் நிதி ஒதுக்கீட்டிலுள்ளது; முதலாளித்து வக் கட்டமைப்பின் நிதி ஒதுக்கீடுகள் பொதுசுகா தாரத் துறையை மிகவும் பாதித்துள்ளது. நம் முன் இருக்கும் பிரச்சனை இக்கிருமியின் பிரச்சனை மட்டுமல்ல; தனியார் லாபத்திற்காக பலிகொடுக்கப் பட்டு, மருத்துவப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் போய்முடிந்திருக்கும் ஒரு சிதைந்த பொதுசுகாதாரக் கட்டமைப்பினால் இந்நெருக்கடி இருமடங்கு தீவிரமடைந்துள்ளது. இரண்டாவது, வேலையின்றி திண்டாடும் பலகோடி விளிம்பு நிலை தொழிலாளர்களுக்கு -  தினசரி மற்றும் வாரக் கூலி களாக வாழும், பெரும்பாலும் வங்கிக்கணக்கின்றி அதனால் சேமிப்பிற்கோ அரசு உதவித் தொகைக் கோ வழியில்லாத  முறைசாரா தொழிலாளர்களு க்கு - நிவாரணம் அளிக்கவேண்டும். வியட்நாம், கேரளா, சீனா மற்றும் வெனிசுலா போன்ற சோசலிச பகுதிகளில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு நேரடி யாக ஊட்டச்சத்துக் கிடைக்கும்பொருட்டு உண வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன; இது சோசலிசக் கட்டமைப்பில் சாதாரணமானவொரு அடிப்படைச் செயல்பாடாகும், எனினும் இதை செய்வது முதலா ளித்துவக் கட்டமைப்பில் கடினமானஒன்றாக மாறுகிறது.

ஒரு உதாரணத்திற்கு வியட்நாம் மற்றும் இத்தாலிக்குள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம். வியட்நாமில் இக்கிருமியின் வரவு அறிவியல்பூர்வ மான முறையில் கையாளப்பட்டு இன்றுவரை கோவிட்-19 இறப்புகள் ஏதுமில்லை; இத்தாலியோ இக்கிருமியினால் முடக்கப்பட்டு, தொற்றுச் சங்கி லியை உடைக்க மிகவும் திண்டாடிவிட்டது. இத்தாலி மற்றும் வியட்நாமின் நிலைமைகளி லுள்ள வித்தியாசத்திற்கான காரணம் தான் என்ன? சரியாக ஐந்து காரணங்கள் உள்ளன: அரசியல் தலைவர்களின் அறிவியல்சார்ந்த அணுகுமுறை, கிருமித் தொற்றை எதிர்கொள்ள அரசின் விரைந்த செயல்பாடு, பெருமளவில் மக்கள் இயக்கங்களின் பங்கெடுப்பு, ஊரடங்கிற்குக் கட்டுப்பட மக்களு க்குத் தேவையான நிவாரணங்கள் மற்றும் பிறநாடு களுக்கு உதவியளிக்க பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பது போன்ற பன்னாட்டு நட்புணர்வு. இதில் ஐந்தாவது கூறை எடுத்துக்கொண்டோமா னால், நோய்க்கு எதிரான வியட்நாமின் நடவடிக்கை யில் பிறநாட்டவருக்கு எதிரான வெறுப்புணர்வு துளிகூட இல்லை; இத்தகையதொரு செயல் பாட்டை தலைமை தாங்கி நடத்தியதற்காக பிரதமர் நிகுயென் சுவான்  புக் பாராட்டப்பட வேண்டும். 

ஒருங்கிணைப்பு -  உழைப்பு - நம்பிக்கை

கேள்வி: கடைசியாக, பிரேசில் போன்ற பல நாடுகளில் வலுப்பெறும் நவதாராளமயம், தீவிர வலதுசாரி சிந்தனை மற்றும் நவபாசிசத்தின் முன் இடதுசாரிகளின் சிதறல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பின் அடிப்படை கருவியான தெருப் போராட்டங்கள் நடத்துவதற்கான தடைகள் இருக் கையில், நம்பிக்கையுடன் இருப்பது சாத்தியமா? எங்கிருந்து அந்த நம்பிக்கையை நாம் பெறுவது?

பதில்: நமது பலத்தின் முக்கிய ஊற்றுகளான, தொழிலாளர் மற்றும் விவசாயிகள் சங்கங்களும் வெகுவாக வலுவிழந்துள்ளன என்பதை இடது சாரிகள் கவனிக்க வேண்டும். உழைக்கும் வர்க்கம், விவசாயிகள்  மற்றும் விளிம்புநிலைத் தொழிலா ளர்களின் அமைப்புகளை வளர்த்தெடுப்பது அவசி யம். நம்மிடம் யோசனைகள் இருப்பது மட்டுமோ, ஏன் மக்களின் துடிப்பறிந்திருப்பது மட்டுமோ போதாது. நம்மிடம் ஒருங்கிணைக்கும் திறன் இல்லா விட்டால், மக்களின் துயரத்தைக் கொண்டு அதை வெறுப்பாகத் திரித்தாளும் நவபாசிசவாதிகளை வீழ்த்துவது முடியாத செயலாகிவிடும். உலகம் முழு வதுமுள்ள இடதுசாரி இயக்கங்கள், தொற்று சம யத்திலும், நமது பலத்தை தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து உத்வேகத்தை ஊட்டி அது குறைந்து விடாமலிருக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தனிமையில் சோசலிசத்தை  வளர்த்தெடுப்பது கடினம்; மேலும், கைபேசிகள் இருந்தும் இணைய வசதியில்லாத காரணத்தினால் தோழர்கள் பலரால் இணையசெயல்பாடுகளில் பங்கெடுக்க முடிவ தில்லை. துயரத்தின் தீவிரம் நாம் அறிவோம். நிவார ணம் கொண்டுசேர்ப்போரில் நாமும் இருக்கிறோம். இத்தொற்று அச்சுறுத்தல் அடங்கிய பின்பும் மக்களிடையே  அவர்களின் கவலைகளை தீர்க்கும் ஒரு செயல்பாட்டுத் திட்டத்துடன் இருப்போம் என்று நம்புகிறோம். கோவிட்-19க்குப் பிறகான ஒரு உல கத்திற்கான செயல்திட்டம் சோசலிசச் சிந்தனையில் ஆழமாக ஊன்றியுள்ளதாகவே இருக்கவேண்டும்.

இத்தொற்றை சமாளிப்பதில் முதலாளித்துவ நாடுகள் அடைந்த தோல்வி, தொடர்ந்து வரும் மனித வாழ்வின் குரூரத்தில் மற்றொரு பகுதி மட்டுமே. ஆனால், மனிதவாழ்விற்கு  இன்னொரு பக்கம் உள்ளது. அதுவே, நல்லொழுக்கத்துடன் வாழ முயற்சிக்கும் நமது திறன். இக்குரூரத்தினைக் கண்டு நாம் துவளவேண்டாம். உணர்வுப்பூர்வமான மக்க ளாகிய நம்மிடையே ஒரு ஒழுங்கான வாழ்க்கைக் காகப் போராடும் திறனுள்ளது என்பதை நாம் நினை வில் கொள்ளவேண்டும். அதற்காகவே நாம் வாழ வேண்டும். 

தமிழில் : விகாஷ் ஷிவ்ராம்
 

 

;