செவ்வாய், அக்டோபர் 27, 2020

கட்டுரை

img

கால்டாக்சி தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும்...

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கம் அறிவித்தது. ஆனால் நோய்த்தொற்றில் செத்ததைவிட பசியிலும், வாங்கிய கடனைகட்ட முடியாமலும் கால்டாக்சி, டூரிஸ்ட் டாக்சி ஓட்டுனர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டு பல ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இந்த பொதுமுடக்கத்தில் பாதிக்கப்படும் முறைசாரா தொழிலாளர்களாகிய ஓட்டுநர்களுக்கு பாதுகாப்போ அல்லது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அரசு கடமை தவறிவிட்டது. தற்போது சிலதளர்வுகள் அறிவித்தாலும் வாகனங்கள் பழைய நிலையில் இயங்கவில்லை. சுற்றுலாத் தளங்கள் விமான நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ரயில் நிலையங்கள், ஐடி நிறுவனங்கள், மால்கள்இவையெல்லாம் முழுவதும் செயல்
படாமல், டூரிஸ்ட் டாக்சி தொழில் நடத்துவது மிகவும் சிரமமே. இந்த விசயங்கள் அரசுக்குத் தெரிந்தும் மாததவணை, சாலைவரி, இன்சூரன்ஸ் போன்றவைகளை உடனடியாகக் கட்ட நிர்ப்பந் திப்பது பல தொழிலாளர்களை தொழிலைவிட்டு வெளியேற்றுவதற்கும், தற்கொலைக்குத் தூண்டுவதற்கும் வழிவகை செய்கிறது. வாகனங்களுக்குக் கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் குண்டர்களை ஏவி கடன் வசூல் செய்வது,வாகனத்தைப் பறித்துக் கொள்வது, தொலைபேசியில் மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதால் தொழிலாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது அனைத்தும் தெரிந்து அரசு மவுனம் காப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. நிலைமை சரியாகும் வரைஇஎம்ஐ தள்ளிவைக்க வேண்டும்என்பதே அனைத்து தொழிலாளர் களின் எதிர்பார்ப்பு. அரசு விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.

==எம்.பூபதி==

மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம்

;