சனி, செப்டம்பர் 19, 2020

என்ன சொல்லியிருக்காங்க

img

‘மலையாள மனோரமா’வின் பொய்கள் அன்றும்- இன்றும்

இஎம்எஸ் அரசு கவிழ்க்கப்பட்ட 61-ஆம் ஆண்டு

1959-ல் இஎம்எஸ் அரசு கவிழ்க்கப்பட்ட போது திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஎம்எஸ் கூறினார்,‘ உண்மையை சிதைப்பது மட்டுமல்ல உண்மைகளை நமது சில பத்திரிகைகள் உற்பத்தி செய்வதையும் காண முடிகிறது’ என்றார். அவரது அரசு கவிழ்க்கப்பட்ட 61 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளம் காண்பது அதற்கு சமமான நிகழ்ச்சிப் போக்குகளே ஆகும். பொய் கதைகள், ஊகங்கள், கேள்விப்பட்டவை போன்றவை உண்மைகள் என்கிற பெயரில் இன்றும் பிரசுரிக்கப்படுகின்றன. அன்றைய போராட்டங்களுக்கு சமுதாய சக்திகளின் ஆதரவு இருந்தது. இன்று அதற்கு பதிலாக வகுப்புவாத பாசிச சக்தியான பாஜக உள்ளது. அன்று காங்கிரஸ் மத்திய அரசை தலையிடச் செய்தது. இன்று அச்சுறுத்தலுடன் பாஜக தலைவர்கள் உள்ளனர்.  அன்று கல்வி மசோதாவும், விவசாய மசோதாவும் அரசை கவிழ்ப்பதற்கான காரணங்களாக இருந்த போதிலும், பொய் செய்திகள் மூலமாகவும் மத உணர்வுகளைத் தூண்டியும் மக்களை தெருவில் இறக்கினர்.

அன்றும் பொய் பிரச்சாரம்

ஆட்சியின் துவக்க மாதங்களில் உணவுப் பஞ்சம் கடுமையான போது எதிர்க்கட்சி பட்டினி ஊர்வலம் நடத்தியது. கேரளாவுக்கு அதிக தானியங்களை ஒதுக்க மத்திய அரசு முன்வரவில்லை. கேரள அரசு ஆந்திரா வில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து நியாயமான விலையில் கொடுத்தது. அதிக விலைக்கு அரிசி  வாங்கப் பட்டது என்றும், கட்சி நிதிக்கு பணம் திரட்டுவதே அரிசி  வர்த்தகம் என்றும் ஆரம்பத்தில் கூறப்பட்டது.  விடுதலைப் போராட்டம் (விமோசன சமரம்) தொடங் கிய போது, கே.சி.ஜார்ஜுக்கு எதிரான ‘அரிசி ஊழ லாக’ அது வளர்ந்தது. ஈ.எம்.எஸ் அரசு செய்த முதல் நடவடிக்கை, முதலாளிக்கு ஆதரவாக காவல்துறையி னர் தலையிடுவதையும், தொழிலாளர்களைத் தாக்கு வதையும் தடுப்பதாகும். அதையே ‘கேரளம் பாதுகாப் பற்றது’ என்று திசை திருப்பினர்.

பாரபட்சம் நீங்கியது

கம்யூனிஸ்ட்டுகளை அனைத்து துறையிலும் திணிப் பதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. இஎம்எஸ் அரசு வரும்வரை கட்சி ஊழியர்களை காவல்துறை சரி பார்ப்பு என்கிற பெயரில் தவிர்ப்பதே வழக்கமாக இருந் தது. இந்த பாகுபாடுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வேலை கிடைக்கத் தொடங்கி யது. அதுவே இந்த குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது.

நேருவை திசை திருப்பினர்

பிரதமர் நேருவை சார்ந்தும் தவறான செய்திகள் வந்தன. ஜூன் 7, 1957 அன்று, நேருவின் ஊட்டி உரையை, “ஜனநாயக முறையிலும் அமைதியிலும் உறுதியாக நிற்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கட மையாகும்.” என தி இந்து வெளியிட்டது. ஆனால், மனோரமா நாளிதழ், ‘அரசை அமைதியான முறையில் கலைக்க மக்களுக்கு உரிமை உண்டு’ என நேரு கூறிய தாக செய்தி வெளியிட்டது.  இன்றும் அதே அடுப்பில் தான் செய்திகள் தயார் செய்யப்படுகிறன என்பதை அண்மை கால ஊடக செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. எந்த ஒரு ஆதாரமும் தராமல் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தின் மீது பழிசுமத்தினர்.


 

;