வெள்ளி, செப்டம்பர் 25, 2020

என்ன சொல்லியிருக்காங்க

img

ரூ.1,620 கோடி செலவில் கோவையில் புதிய சாலை

சென்னை, பிப். 14- கோவை விமான நிலையம் - உப்பிலிபாளையம் வரையில்  உள்ள அவினாசி சாலை நெடுகிலும் 10 கி.மீ. நீளத்திற்கு 1,620  கோடி ரூபாய் செலவில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்பட  உள்ளது. இதற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிய மைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் விபத்துக்களில் தவிர்க்கக்கூடிய  உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களைக் குறைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்  கம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 500 கோடியாக உயர்த்தப்படும். நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்பிற்கென தனியாக ஒரு பிரிவு  உருவாக்கப்படும். சென்னை, மதுரை கோவை மாநகராட்சி களில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் தொடங்கப்படும் என்றார்.

கோபிசெட்டிப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை கள் தனியாரிடம் கொடுக்கப்படும். ஆயிரத்து 500 கி.மீ. நீளமுள்ள கிராமப்புற ஊராட்சி, ஊராட்சி ஒன்றியச்  சாலைகள் ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்  படும் என்று கூறிய அவர், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு  மேம்பாட்டு திட்டத்திற்கு 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது என்றார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தில்  ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 655 கி.மீ. சாலை 6 ஆயி ரத்து 448 கோடி செலவில் வலுப்படுத்தப்படும். இதற்காக ஆயிரம்  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

;