சனி, செப்டம்பர் 19, 2020

என்ன சொல்லியிருக்காங்க

img

நகரும் ரேசன் கடைகள் விரைவில்!

அமைச்சர் தகவல்

சென்னை,ஆக.12- தமிழகத்தில் விரைவில் நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில்  மேற்கொள்ளப்படவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகத்தில்  துறை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.  பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளோம். விவசாயி களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் கொடுத்து வருகிறோம். கொரோனா காலத்தில் கடன் தள்ளுபடி என்பது விவசாயி களுக்கு இல்லை. ஆனால் விவசாயிகளுக்கு பயிர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள்  கொடுத்துள்ளோம்.  தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்படும். சென்னையில் மட்டும் 400 நகரும் ரேசன் கடைகள் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு  அமைச்சர் தெரிவித்தார்.
 

;