வெள்ளி, செப்டம்பர் 25, 2020

உலகம்

img

ஹைட்டி காப்பகத்தில் தீ விபத்து - 15 குழந்தைகள் பலி

ஹைட்டி நாட்டில் உள்ள காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைட்டி நாட்டின் போர்ட் ஓ பிரின்ஸ் நகரத்தில் அமெரிக்க தன்னார்வ தொண்டு குழு ஒன்று, ஆதரவற்ற குழந்தைகளுக்கன காப்பகம் நடத்தி வருகிறது. அந்த காப்பகத்தில் கடந்த வியாழன் அன்று, இரவு 9 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர், 1.5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், இதில் 2 குழந்தைகள் உடல் கருகியும், மேலும் 13 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர். இல்லாத காரணத்தால் வெளிச்சத்துக்காக வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி கவிழ்ந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 

;