உலகம்

img

அமெரிக்காவில் டிரம்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி...

வாஷிங்டன்
அமெரிக்காவில் ஜனாதிபதி  டிரம்ப்பின் உச்சநீதிமன்ற நீதிபதி நியமன முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நகரங்களில் பெண்கள் பேரணி நடத்தினர். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்  நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் மரணம் அடைந்தார்.இந்நிலையில் அந்த பதவிக்கு எமி கோனி பேரட் என்பவரை நியமிக்க ஜனாதிபதி  டிரம்ப் முடிவு செய்து, செனட் சபையின் ஒப்புதலை பெற்றுள்ளார்.

மறைந்த நீதிபதி கின்ஸ்பர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், எமி பேரட்டின் நியமன முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெண்கள் பேரணி நடத்தினர்.இதில் வாஷிங்டன் டி.சி.யில் பிரீடம் பிளாசாவில் இருந்து நேசனல் மால் வரை பேரணியாக சென்ற பெண்கள்,எமி பேரட் வெளியேற வேண்டும்.  டிரம்ப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.  

;