செவ்வாய், அக்டோபர் 27, 2020

உலகம்

img

வளரும் நாடுகளுக்கு கொரோனா  தடுப்பூசிக்கு ரூ.90,000 கோடி...  

வாஷிங்டன்
வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ரூ.90 ஆயிரம் கோடி வழங்கஉலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உதவும் வகையில் உலகவங்கி இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க வளரும் நாடுகளுக்கு உலக வங்கி வழங்க முடிவு செய்துள்ள 160 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) நிதி உதவியின் ஒருபகுதியாக இந்த நிதி அளிக் கப்படுகிறது. இதுபற்றி உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் அவசர நிலைக்கு தீர்வு காணஎங்களது விரைவான அணுகுமுறையை விரைவுபடுத்துகிறோம். வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி நியாயமாகவும், சமமாகவும் கிடைப்பதற்காக இதைச்செய்கிறோம். உலக வங்கியின் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக்கழகம், தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.30ஆயிரம் கோடி) உலகளாவிய சுகாதார தளம் மூலம்முதலீடு செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

;