வியாழன், செப்டம்பர் 24, 2020

உலகம்

img

அமெரிக்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்...  சுனாமி எச்சரிக்கை விடுப்பு

வாஷிங்டன்
அமெரிக்காவின் வடமேற்கு பகுதி மாகாணமான அலாஸ்காவின் சிக்னிக்கில் பகுதி பனிப்பாறைகளால் மூடப்பட்ட பகுதியாகும். இந்த பகுதியிலிருந்து சுமார் 75 மைல் தூரத்தில் இன்று காலை 11.42 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  7.8 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய முழுவிபரம் இன்னும் வெளியாகவில்லை. எனினும் தேசிய நெடுஞ்சாலை பகுதி ஒன்று நிலநடுக்கத்தால் உருகுலைந்துள்ளது.   

;