உலகம்

img

அதிக காற்று மாசுக்கு இந்தியா, சீனா, ரஷ்யாதான் காரணமாம்... அபாண்டமாக பழிபோடுகிறார் டிரம்ப்

வாஷிங்டன்:
உலகில் அதிகமான காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்றுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அபாண்ட மாக பழிபோடுகிறார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதத்தில்நடைபெறுகிறது. இதில்  குடியரசுக் கட்சிசார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார்.  கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரச்சாரங்களில் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக் கிறார்.

நார்த் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப்  பேசுகையில், உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம். காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்தநாடுகள்தான் வெளியேற்று கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசு வாயுவைக் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது.  பிளாஸ்டிக்குக்குப் பதிலாக காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என்று நினைக்கவில்லை. குளிர் பானம் குடிக்கும் ஸ்ட்ராவுக்குப் பதிலாக காகிதத்தில் குடிக்க முடியுமா? அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மோடியின் பதில் என்ன?
பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்துகடந்த 2017 ஆம் ஆண்டுஅமெரிக்கா வெளியேறு கிறது என ஜனாதிபதி டிரம்ப்திடீரென அறிவித்தார். டிரம்ப் சுமத்தியுள்ள அநியாயமான குற்றச்சாட்டிற்கு இந்திய பிரதமரும் டிரம்ப்பின் நண்பருமான மோடி என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்று அரசியல் கட்சியினரும் மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.
 

;