திங்கள், செப்டம்பர் 28, 2020

உலகம்

img

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

வாஷிங்டன்:
ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. இந்த சிறுகோள் அளவில் பெரியது. இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது.இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப் பில்லை. இது செப்டம்பர் 14 ஆம்தேதி பூமியைக் கடந்து செல்லும்.இது பூமியின் மீது மோத வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன. ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்று சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தது.

;