சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

வடகொரிய ஜனாதிபதியை  குறைத்து மதிப்பிடாதீர்கள்... அமெரிக்க ஜனாதிபதி   டிவிட்டரில் பதிவு 

வாஷிங்டன்:
வடகொரியா  ஜனாதிபதி  கிம் ஜோங் உன் நலமாக உள்ளார்.அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழங்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்-னின்  உடல் நலம் பற்றி சமீப காலமாக பல்வேறு வதந்திகள் மேற்கத்தியஊடகங்களால் கிளப்பிவிடப்பட்டன. ஆனால் இதனை மறுக்கும் விதமாக வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின்உயர்மட்டக் கூட்டத்தில்  கிம் ஜோங் உன் கலந்து கொண்ட புதிய படங்களை வட கொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில் இது குறித்து டிரம்ப் தனது டிவிட்டரில், “கிம் ஜோங் உன் நலமாக உள்ளார். அவரை குறைத்து மதிப்பிடவேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்தப் பதிவு சர்வதேச அரங்கில் கவனத்தை பெற்றுள்ளது.

;