வெள்ளி, செப்டம்பர் 25, 2020

உலகம்

img

வங்க தேசத்தில் படகு விபத்து - 30 பேர் பலி

வங்க தேசத்தில், படகு ஒன்று மற்றொரு படகின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 30 பேர் பலியாகி உள்ளனர்.

வங்கதேசம் தலைநகர் டாக்காவின் சியாம்பஜார் பகுதியில் உள்ள முன்ஷிகாஞ்ச் என்ற இடத்தில் இருந்து சாதர்காட் என்ற இடத்திற்கு செல்ல, பூரிகங்கா நதியை கடக்க வேண்டும். இந்த நிலையில், இன்று காலை மார்னிங் பர்ட் என்ற பயணிகள் படகு, 50க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு பூரிகங்கா நதியில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு படகு அதன் மீது மோதியது.  இதில், மார்னிங் பர்ட் படகு நிதியில் மூழ்கியது. இந்த விபத்தில், 3 குழந்தைகள், 8 பெண்கள், 19 ஆண்கள் என 30 பேர் பலியாகி உள்ளனர். சிலர் நீந்தி கரையை அடைந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மாயமானவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

;