செவ்வாய், அக்டோபர் 27, 2020

உலகம்

img

ஐரோப்பாவில் அடுத்த ஆட்டத்தை துவங்கிய கொரோனா...  ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு தொற்று...  

லண்டன் 
கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் உருக்குலைந்த ஐரோப்பாவில் ஜூன் மாதம் வைரஸ் பரவல் சற்று தணிந்தது. இதனால் கண்டத்தில் பெரும்பலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பின. ரஷ்யா மட்டும் கொரோனாவை ஒழிக்க இடைவிடாமல் போராடிக்கொண்டிந்தது. 

இந்நிலையில் அக்கண்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக முதல் அலையில் இல்லாத அளவிற்கு சில நாடுகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் முதலிடத்தில் இருப்பது பிரான்ஸ் நாடு தான். அங்கு  இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 19 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 14 ஆயிரம் பேருக்கும், ஸ்பெயினில் 11 ஆயிரம் பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.  

ஐரோப்பாவின் முன்னாள் கொரோனா மையமான இத்தாலியில் புதிய உச்சமாக தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது. ஐரோப்பா கண்டம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மீண்டும் கொரோனா தனது அதிரடியை துவங்கியுள்ளதால் ஐரோப்ப மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இரண்டாம் அலையின் முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து நாடு மூன்று அடுக்கு ஊரடங்கை அமல்படுத்துயுள்ளது. மற்ற நாடுகள் ஊரடங்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை 

;