சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது...  

ரியோ 
தென் அமெரிக்க கண்டத்தின் கொரோனா மையமாக உள்ள பிரேசிலில் வைரஸ் பரவல் இன்னும் மின்னல் வேகத்தில் தான் உள்ளது. புரியும்படி சொன்னால் புகை போல தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டுகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டி வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.  

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 49,502 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலின் மொத்த கொரோனா பாதிப்பு 29.67 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 1,058 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 99,702 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.68 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இன்னும் 7.98 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,318 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை தொடும் நிலை உருவாகியுள்ளது.    

;