திங்கள், அக்டோபர் 26, 2020

உலகம்

img

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஒப்பந்தம்

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் v கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு 10 கோடி ஸ்புட்னிக் V  தடுப்பூசி அனுப்பப்படும் என ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பின் கொரோனா தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

;