திங்கள், செப்டம்பர் 28, 2020

உலகம்

img

ஐந்து அம்ச திட்டம்: இந்தியா - சீனா ஒப்புதல்.... எல்லை பதற்றத்துக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு

மாஸ்கோ:
இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, துருப்புகளை பின்வாங்கிக் கொள்வது உள்ளிட்ட ஐந்து அம்சதிட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியஇருவரும் வியாழக்கிழமை அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை இரண்டு மணிநேரம் நடந்தது. அப்போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், பல்வேறு தருணங்களில் சீனப் படைகள் நிகழ்த்திய அத்துமீறல் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ட்ஸோவின் தெற்கு கரைப்பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே சீன படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தன.இந்நிலையில், “மாஸ்கோவில் நடைபெற்ற இச்சந்திப்பில், எல்லைகட்டுப்பாட்டு பகுதியில், சீன துருப்புகள் ஆயுதங்களுடன் கூடியது குறித்துஇந்தியா வலுவான கருத்தை பதிவுசெய்தது. இவ்வாறு எல்லைப்பகுதியில் அதிகளவிலான சீன துருப்புகள் கூடுவது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது. இதற்கு சீனத் தரப்பில் இருந்து சரியான விளக்கமும் தரப்படவில்லை. சீன துருப்புகளின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகவும், விதிமுறைகளை மதிக்காமல் இருப்பதாகவும் கருதப்படுகிறது” என இந்திய தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1976ஆம் ஆண்டு தூதரக நிலையிலான இந்திய - சீன உறவுகள் மீண்டும்தொடங்கியது. 1981ல் நடந்த எல்லை பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அமைதி நிலவியதாக தெரிவித்தார்.

மேலும், “இந்திய, சீன எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண நேரமும் முயற்சியும் தேவைப்படும் என்றாலும், இருநாட்டு உறவுகள் மேம்பட, இதற்கு தீர்வுகாண்பது அவசியமாகிறது. எனினும், சமீபத்தில் லடாக்கில் நிகழ்ந்தசம்பவங்கள் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இரு நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்” என்று சீன தரப்பிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாகவும் ஏஎன்ஐ செய்தி கூறுகிறது.பேச்சுவார்த்தையின் முடிவில் அமைதியை நிலைநாட்டுவது, துருப்புகளை பின்வாங்கிக் கொள்வது ஆகியவற்றை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீன தரப்பு கூறுவது என்ன?
எல்லைப் பகுதியின் நிலை குறித்து சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை அந்நாட்டு ளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சுட்டிக்காட்டினார்.இருநாடுகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் துப்பாக்கி பிரயோகம் மற்றும் ஆபத்தான சூழல் நிலவுவதை உடனடியாக முடிக்க வேண்டும் என  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வலியுறுத்தியதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.“பதற்றத்தை குறைக்க, படைகளை பின்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் துருப்புகள் எல்லையில் இருந்து வெளியேற வேண்டும்” என்றும்சீன வெளியுறவுத்துறை வெளியிட் டுள்ள றிக்கையில் கூறப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தை மூலம் இதற்குதீர்வு காணவும் விருப்பம் ரிவித்துள்ளசீனா, எல்லைப் பகுதிகளில் அமைதியைநிலைநாட்ட, இந்திய தரப்புடன் ராஜீயரீதியாகவும், ராணுவம் மூலமாகவும்தொடர்பில் இருக்கும் என்று கூறியுள்ளது.சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய தரப்பின்கருத்துகளும்  சுட்டிக்காட்டப்பட்டுள் ளன.“இந்திய - சீன உறவுகளின் வளர்ச்சி,எல்லை பிரச்சனையின் தீர்வைப்பொறுத்தது என்று இந்தியத் தரப்பு கருதவில்லை. இந்தியா பின்னோக்கிச் செல்லவிரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் இந்திய தரப்பு தயாராக இருக்கிறது” என்று சீனாவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கூட்டறிக்கை
இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “இந்தியா மற்றும் சீனா இடையிலான வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களை பின்பற்றுவதோடு, உறவுகளை மேம்படுத்த இருநாட்டுஅமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ள னர்.இந்திய சீன எல்லை விவகாரங்கள் தொடர்பாக தற்போது இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி, இந்தப் பிரச்சனை பெரிதாகாமல் அமைதியை பேண இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன” என தெரி விக்கப்பட்டுள்ளது.

;