வெள்ளி, அக்டோபர் 30, 2020

உலகம்

img

ரஷ்யாவிலும் 2-வது அலை... அடுத்த அதிரடியை துவங்கிய கொரோனா...   

மாஸ்கோ 
இடைவேளி இல்லாமல் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா என்னும் கொடூர வைரஸ் இதுவரை 3 கோடி பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. இதில் 9.70 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், 2.31 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

\இதுவரை உலகில் பரவிய வைரஸ்களில் கொரோனா சற்று வித்தியாசமாக இருப்பதால் மருத்துவ தரமிக்க நாடுகள் கூட பரவலை தடுக்க முடியாமல், தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக கொரோனா எப்பொழுது ஓய்வெடுக்கிறது, எப்பொழுது பரவுவுகிறது என்பதை அறிய முடியாமல் உலக நாடுகள் பல இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர். 

கொரோனவை வென்ற நாடுகள் நிம்மதி பெரு மூச்சுடன் இயல்புநிலைக்கு திரும்பினாலும், மீண்டும் பரவ தொடங்குகிறது. இந்த நிகழ்வு தற்போது ஐரோப்பா கண்டத்தில் நிலவி வருகிறது. அங்குள்ள பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் கட்ட கொரோனா பரவலில் உருக்குலைந்து பலத்த சேத்ரத்தை சந்தித்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது 2-வது அலையில் சிக்கி திணறி வருகிறது. இந்த லிஸ்டில் ரஷ்யாவும் சிக்கியுள்ளது. 
ரஷ்யா முதல் கட்ட கொரோனா பரவலை இன்னும் சமாளிக்கவில்லை.அதற்குள் கூடுதல் எண்ணிக்கையில் 2-வது அலையை கொரோனா தொடங்கியுள்ளது.          

அதாவது ரஷ்யாவில் பெரும்பாலும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்குள் தான் இருக்கும். அங்கு மே முதல் வாரத்தில் உச்சத்தில் (தினசரி பாதிப்பு 11 ஆயிரத்துக்கு மேல்) இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து ஆகஸ்ட் மாத இறுதியில் 5 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய நிலையில்,  கடந்த சில நாட்களாக தினசரி 7 ஆயிரத்தி ஒட்டி பயணித்து வருகிறது. இதனால் ரஷ்ய மக்கள் ஒருவித கலக்கத்துடன் உள்ளனர். 

ரஷ்ய கொரோனா பாதிப்பு... 

மொத்த பாதிப்பு : 11.15 லட்சம் 

மொத்த பலி : 19,649

குணம் : 9.17 லட்சம்    

;