உலகம்

img

பிரேசில்: மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி

பிரேசில் நாட்டின் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பிரேசிலின் வட மாநிலமான பாராவில் உள்ள பெலம் நகரில் உள்ள மதுபான விடுதியில் ஞாயிறன்று ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கார்களில் வந்த 7 பேர் விடுதிக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் மதுபான விடுதியில் இருந்த 6 பெண்கள் 5 ஆண்கள் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் தலையிலேயே குண்டு பாய்ந்துள்ளதால் துப்பாக்கி சூடு பயங்கரவாத தாக்குலா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;