திங்கள், அக்டோபர் 26, 2020

உலகம்

img

131 ஆண்டுகள் பழமையான 'ஈபிள் டவர்' கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

பாரிஸில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான 'ஈபிள் டவர்' கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்திற்கு புதனன்று பிரெஞ்சு பிரெஞ்சு பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கோபுரத்தை சுற்றி பாரிஸ் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் அருகில் உள்ள சாலைகளையும், ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் என அனைத்து சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். புதனன்று கோபுரத்திற்கு உள் பகுதியில் யார் இருந்தது என முழுமையாக தெரியவரவில்லை. இது குறித்து ஈபில் டவர் நிர்வாகம் எந்த அறிக்கையில் வெளியிடவில்லை.

131 ஆண்டுகள் பழமையான இந்த 'ஈபில் டவர் ' கோபுரத்திற்கு சாதாரண ஆண்டுகளில் தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகிறார்கள். ஆனால், கொரோனா தொற்று மற்றும் பயண கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு வருகைகள் குறைந்து விட்டது. சில சமயங்களில் தற்கொலை அச்சுறுத்தல்கள், வெடிகுண்டு மிரட்டல், தொழிலாளர் வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் மூடப்படுகிறது.  
 

;