வியாழன், அக்டோபர் 22, 2020

உலகம்

img

நேபாளம் - நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் தொடர்ந்து சில நாட்களாக  கனமழையால் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நேபாளம் சியாங்ஜா மாவட்டத்தில் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
 

;