சனி, செப்டம்பர் 26, 2020

உலகம்

img

நைஜிரியாவில் துப்பாக்கிச் சூடு - 21 பேர் பலி

கடுனா
ஆப்பிரிக்க கண்டத்தின் முக்கிய தீவிரவாத அமைப்பான போகோஹராம் பயங்கரவாதிகள் நைஜிரியா, எகிப்து, மாலி, சாட், பர்கினோ பசோ போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போகோஹராம் மட்டுமல்லாமல் ஐ.ஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளும் இந்த பகுதியில்  செயல்பட்டு வருகின்றன.   

குறிப்பாக போகோஹராம் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், நைஜீரியாவின் கடுனா மாநிலத்தின் ஃபிகா கிராம பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பொதுமக்களை நோக்கி சரமாரியாக (இரு சக்கர வாகனங்களில் வந்து) துப்பாக்கியால் சுட்டனர்.கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கிராம மக்கள் 21 பேர் பலியாகினர். பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் போகோஹராம் தீவிரவாத அமைப்பு மீது சந்தேகம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

;