உலகம்

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ. 3.60 - ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத னால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற் போது 38 அடியாக உயர்ந்துள்ளது.

சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்  இதனால் இந்தியாவும் சம அளவில் பாதிக்கும் என சீனா தெரிவித்துள் ளது.

செவ்வாய் கிரகத்திற்கு அமெரி க்காவின் நாசா விண்கலம் ரோவர் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

மறு உத்தரவு வரும் வரை பி.எஸ். 4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இருந்த இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக  பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு ஊர டங்கு காலத்தில் கிழக்கு  ஆப்பிரிக்க நாடான மலாவியில் சிறு மிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் 10 வயதில் இருந்து 14 வயதுக்குட்பட்ட 7 ஆயிரத்திற்கும்  அதிகமான மாணவி கள் கருவுற்றிருப்பதாக அரசு அதி காரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

;