சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்க நகைக் கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் பாலின சமத்து வத்தை உணர்த்தும் வகை யில் போக்குவரத்து சிக்னல் விளக்கு களில் பெண் உருவ படத்தை வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுவையில் மும்மொழி கல்வித் திட்டம் என்பது மக்களுக்கு பலனளிக்காது என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிலவின் மேல்பரப்பில் சந்திர யான்-2 ரோவர் கிடப்பதாக சென்னையை சேர்ந்த இன்ஜினீயர் சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்து இஸ்ரோ மற்றும் நாசாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தனியார் ரயில் களின் பெட்டிகள் பராமரிப்புக் காக, பணிமனைகளை தயார் செய்யும் நடவடிக்கையில் ரயில்வே துறை இறங்கியுள்ளது.

வங்க கடலில் இன்று புதிய காற்ற ழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானி லை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடு வதற்கு அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சா ரம் பரவி வருவது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தேனியில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர், நகராட்சி  நிர்வாக ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 


 

;