வெள்ளி, செப்டம்பர் 25, 2020

உலகம்

img

இந்நாள்... டிசம்பர் 08 இதற்கு முன்னால்...

1963 - பான் அமெரிக்கன் வர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்று மின்னலால் தாக்கப்பட்டு வெடித்ததில் அதிலிருந்த 81 பேரும் பலியாயினர். மிகப்பெரிய அள விலான மின்சாரத்தை புவிக்குக் கடத்துவதே மின்னலால் தாக்கப்படும் பொருட்களுக்கு ஆபத்து ஏற்படக்காரணமாகிறது. அவ்வாறு கடத்த முடியாது என்பதால் பொதுவாக மின்னலால் தாக்கப்படும் விமா னங்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை. சராசரியாக ஒவ்வொரு விமான மும் ஆண்டுக்கு ஒருமுறையாவது மின்னலால் தாக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதனால் அதுவரை அமெரிக்க வரலாற்றில் நடத்தப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதாக இந்த விபத்துக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

சிவில் விமானத் துறையின் ஆய்வுச் செலவுகள் அரிதாக பத்தாயிரம் டாலர்களைத் தாண்டும் என்ற நிலையில், இந்த ஆய்வுகளுக்கு ஒன்றேகால் லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாம். இத்துறை தவிர, கூட்டரசின் வான்பரப்பியல்துறை, விமானத்தை உருவாக்கிய போயிங், என்ஜினைஉருவாக்கிய ப்ராட் அண்ட் வைட்னி, பிற பாகங்களை உருவாக்கிய நிறுவனங்கள் என்று ஆய்வுக்குச் செலவிட்ட தொகை தனி! 16 லாரிகள் நிறைய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் கொண்டுவரப்பட்டு, முடிந்தவரை இணைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சேதமடைந்திருந்த கருப்புப்பெட்டியின் கிடைத்தவரையான தகவல்கள் சோதிக்கப்பட்டன. விமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு எரிபொருட்களில் ஒன்றின் புகை வெளி யேறும் பகுதியில் மின்னல் தாக்கினால் தீப்பிடிக்கும் வாய்ப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த எரிபொருளைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் எரிபொருள் பாதுகாப்பானது என்று வாதிட்டது.

1965 மார்ச் வரை நீடித்த ஆய்வில், அந்த எரிபொருள் நிரப்பப்பட்டி ருந்த இறக்கைப்பகுதி வெடித்தபின்னரே விமானம் விழுந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், மின்னலால் விபத்து ஏற்பட்டது உறுதி யானது. அதுவரை சில விமானங்களில் மட்டுமிருந்த, உராய்வி னால் ஏற்படும் நிலைமின்சாரத்தை வெளியேற்றும் அமைப்பை அனைத்து விமானங்களிலும் பொருத்த உத்தரவிடப்பட்டது. இந்த விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்திலேயே கூட்டரசின் வான்பரப்பி யல்துறை, விமானங்களின் பாதுகாப்புக்குறித்து ஆய்வுசெய்ய ஒரு தொழில்நுட்பக்குழுவை உருவாக்கியிருந்தது. இக்குழு மேற்கொண்ட மிக விரிவான ஆய்வினையடுத்து, விமானங்கள் பறப்பதற்கான தகுதி கள் 1967இல் மாற்றியமைக்கப்பட்டதுடன், மின்னல் பாதுகாப்புக்கான அமைப்புகள் 1970இல் சட்டமாக்கப்பட்டன. இவை அமெரிக்க விமா னங்களுக்கு மட்டும்தான் என்பதால், 1971இல் பெரு நாட்டின் விமான மொன்று மின்னலால் தாக்கப்பட்டு, 91 பேர் உயிரிழந்து, ஒருவர் மட்டும் பிழைத்ததே, மின்னலால் மிகஅதிக உயிரிழப்பு ஏற்பட்ட விபத்தாகியது!

- அறிவுக்கடல்

;