உலகம்

img

சீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 16 பேர் பலி 

சீனா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள  எரிசக்தி நிறுவனமான சோங்கிங் எனர்ஜிக்கு சொந்தமான சாங்சாவோ நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த 16 ஊழியர்கள் பலியாகியுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடை உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, தென்மேற்கு குய்ஷோ மாகாணத்தில் ஒரு சுரங்கத்தில் கடந்த டிசம்பரில் நிலக்கரி மற்றும் எரிவாயு குண்டுவெடிப்பில் 14 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் 2018 இல், சோங்கிங்கில் ஏழு சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலத்தடியில் சிக்கியதில் பதினாறு தொழிலாளர்கள் இறந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சுரங்கத்திற்குள் ஏற்பட்ட அழுத்தம் பாறைகள் உடைந்து உடைந்து, சுரங்கப்பாதையைத் தடுத்து, தொழிலாளர்களை சிக்க வைத்தது. ஒரு சுரங்கத் தொழிலாளி மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
 

;