சனி, செப்டம்பர் 26, 2020

உலகம்

img

ஜப்பான் கப்பலில் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் 

டோக்கியோ 
உலகின் முன்னணி சொகுசு கப்பல் நிறுவனமான டைமண்ட் பிரின்சஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஜப்பானிலிருந்து ஹாங்காங்குக்கு 25-ஆம் தேதி சென்றது. அதன் பின்  ஹாங்காங்கிலிருந்து பிப்ரவரி 3-ஆம் தேதி ஜப்பானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.  

இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கவே அந்த கப்பல் ஜப்பான் நாட்டின் முக்கிய துறைமுகமான யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த கப்பலில் 57 நாடுகளைச் சேர்ந்த 3700 பயணிகள் உள்ளனர். இதில் 138 பேர் இந்தியர்கள். கப்பலில் உள்ளவர்களுக்குத் தினமும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள். அவர்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

;