சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

கொரோனா தடுப்பூசி : மாடர்னா நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுவிட்சர்லாந்து

அமெரிக்க பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசியை உருவாக்கினால் சுவிட்சர்லாந்திற்கு 4.5 மில்லியன் டோஸ் வழங்க, சுவிட்சர்லாந்து அரசு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்திற்கு மாடர்னாவின் தடுப்பூசிக்கான ஆரம்ப நிலை ஒப்பந்தத்தை  உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ,மாடர்னா  நிறுவனத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட முதல் ஒப்பந்தமாகும் என  சுவிஸ் மத்திய அரசு கூறுகிறது.


கடந்த வியாழக்கிழமை ஒரு அலுவலக அறிக்கையில் , சுவிஸ் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கோவிட்-19 தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிக்க அரசாங்கம்  உறுதி செய்ய விரும்புகிறது என்று கூறியது. அதே நேரத்தில், எதிர்கால தடுப்பூசியை நியாயமான முறையில் விநியோகிப்பதற்கான பலதரப்பு திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளிப்பதாக அந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக ,அந்த அறிக்கை கூறுகிறது.

மாடர்னா ஒப்பந்தம் 2.25 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை சாத்தியமாக்க .சுவிஸ் அரசாங்கம் மற்ற தடுப்பூசி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இதற்காக ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசி வாங்க 300 மில்லியன் டாலரை  ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

;