திங்கள், அக்டோபர் 26, 2020

உலகம்

img

ரோஜா தின கொண்டாட்டம் ஏன்?

ஏதோ ரோஜாப் பூக்களைக் கொண்டாடுவதற்கானது என்று அவசரப்பட்டு நினைத்து விடாதீர்கள்.

புற்றுநோய்க்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தவே இந்த ரோஜா தினம். புற்று நோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கே இந்த ரோஜா தினம்.

ஏன் செப்டம்பர் 22 ரோஜா தினமாக தேர்வு செய்யப்பட்டது?

மெலிண்டா ரோஸ், கனடாவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி. மிக அரிதான ஒரு புற்றுநோய் (Askin's Tumor) அவளை பாதித்தது. நோயைக் கண்டறிந்த மருத்துவர்கள், இன்னும் சில வாரங்கள்தான் அவள் உயிர்த்திருப்பாள் என்று மதிப்பிட்டனர். ஆனால் ரோஸ் தன்னைப்பற்றிக் கவலைப்படவில்லை.

1994இல் நோய் கண்டறியப்பட்டு, இரண்டே ஆண்டுகளில் மறைந்து போனாள். ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளும், தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அவர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டினாள். சிறு குறிப்புகளையும் கவிதைகளையும் கடிதங்களாகவும் மின்னஞ்சல்களாகவும் எழுதி அனுப்பினாள். இறப்பதற்கு முன்னால் அப்பா ஹாதவே, அண்ணன் டேவிட் உதவியுடன் ஒரு வலைதளம் உருவாக்கி, புற்றுநோய் பற்றிய செய்திகளைப் பகிர்ந்தாள்.

மெலிண்டா ரேஸ் நினைவாகவே இன்று ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.

மெலிண்டா ரோஸின் வலைதளத்தைத் திறந்தால், தேவையில்லாத சில பைல்கள் தானாகவே டவுன்லோடு ஆவதால், இணைப்பைப் பகிரவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் இந்த முகவரியில் பார்க்கலாம் - monkey-boy dot com/melinda (dot எடுத்து விட்டு புள்ளி வைக்கவும்.)

#Melinda_Rose

#Cancer_Awareness

#World_Rose_Day

-Shahjahan R

;