வியாழன், அக்டோபர் 22, 2020

உலகம்

img

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

உலக நாடுகளில் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளார். 

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில் , இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று குறைந்த நாடுகளில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,20,83,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2, 36,57,580 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 74,44,483 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலக அளவில் அதிகமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 71,39,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 57,30,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 46,27,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா 1,122,241, கொலம்பியா 784,268,  மெக்ஸிகோ 705,263, ஸ்பெயின் 693,556, தென் ஆப்பிரிக்கா 665,188 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகளவில் இதுவரை 981,219 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அமெரிக்காவில் அதிக அளவாக 206,560 பேரும், பிரேசில் 139,065 பேரும், இந்தியாவில் 91,173 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகளவில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்புகளில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், பிரேசில் 3ஆ வது இடத்திலும் உள்ளது. 

;