சனி, செப்டம்பர் 26, 2020

உலகம்

img

ஈராக்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்கும் மாகாணத்தில் அமெரிக்கத் ராணுவ தளங்கள் உள்ளது. அப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், ஈராக்கில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;