வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

உலகம்

img

சுற்றுலா பேருந்து மீது ரயில் மோதல்...  பாகிஸ்தானில் 19 பேர் பலி

இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் நாட்டின் இந்திய எல்லையில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சீக்கிய பயணிகள் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். 

புறநகர் பகுதியான ஷேக்புரா அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை பேருந்து கடக்க முயன்றது. தண்டவாளத்தில் பேருந்து பாதி வரை சென்றபொழுது திடீரென வந்த ரயில் பயங்கர சப்தத்துடன் பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து உருக்குலைந்தது. 

பேருந்தில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், போலீசாரும் மீட்புக் குழுவினரும் விபத்து பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

;