திங்கள், செப்டம்பர் 28, 2020

உலகம்

img

சுகாதார கட்டுபாடுகளுடன் நடக்கிறது.. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்களாம் எனவும்,இந்த தேர்தல் 22 மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயதீன குழுக்கள் போட்டியிடுகிறனர் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதாகவும் ,இதற்க்கான நாளை ( ஆகஸ்ட் 6 )காலை 7  மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

 

;