வெள்ளி, செப்டம்பர் 25, 2020

உலகம்

img

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட அடுத்தடுத்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசியாவின் பல பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் காலை 5 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவாகியது. பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் மாலுக்கு மாகாணத்தில் 6.8 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   
 

;